Sunday, November 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிதி நெருக்கடியால் அரச நிறுவனங்கள் பாதிப்பு

நிதி நெருக்கடியால் அரச நிறுவனங்கள் பாதிப்பு

நிதி நெருக்கடி காரணமாக அமைச்சுகள், திணைக்கள அறக்கட்டளைகள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளுக்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பது கேள்விக் குறியாகியுள்ளது.

நிறுவனங்களின் தலைவர்களின் கூற்றுப்படி> அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான எழுதுபொருட்களை கண்டுபிடிப்பது மற்றும் அத்தியாவசிய ஊழியர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவுகளை வழங்குவது சில நிறுவனங்களில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

அமைச்சுக்களில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது மாத்திரமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பராமரிப்பதிலும் கூட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுகளின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடி ரூபாவுக்கு மேல் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles