Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றின் ஒரு மாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவாம்

நாடாளுமன்றின் ஒரு மாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவாம்

நாடாளுமன்றத்தின் ஒருமாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக இன்று தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் போதே இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபா எனவும், அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் இங்கு மன்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவதே சிறந்த முடிவு. இருப்பினும், அதற்காக தங்கள் அமைச்சால் பணம் கொடுக்க முடியாது. தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles