ஆசிரியர்கள் அதிபர்களின் வேதனத்தை அதிகரிக்குமாறு கோரி ஆசிரிய – அதிபர் கூட்டமைப்பு இன்று வேதன ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தது.
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் வழங்கப்படும் வேதனம் போதுமானதாக இல்லை என இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் ஆசிரியர்கள் – அதிபர்களுக்கு மாத்திரமின்றி சகல தரப்பினரதும் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என வேதன ஆணைக்குழுவிடம் கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.