பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடுகளை இறக்குமதி செய்ய தற்போது கால்நடை அபிவிருத்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த ஆண்டுஇ நாட்டில் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 4,000க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை இறக்குமதி செய்ய தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு மேய்ச்சல் நிலம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் உட்பட பல காரணங்களால் அது நடைபெறவில்லை.
எனவே இது தொடர்பாக அடுத்த சில வாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன் குறித்த கலந்துரையாடல்கள் மூலம் எதிர்வரும் மாதங்களில் கறவை மாடுகளை இறக்குமதி செய்ய முடியும் கால்நடை அபிவிருத்தி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.