Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒக்டோபர் முதல் ஏப்ரல் வரை கடுமை நிலை - உலக உணவு திட்டம் எச்சரிக்கை

ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரை கடுமை நிலை – உலக உணவு திட்டம் எச்சரிக்கை

உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை உள்ளடக்கி வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு திட்டத்தினால் குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு திட்டத்தின் வரைப்படத்திற்கு அமைவாக மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மற்றும், வடமேல் ஆகிய மாகாணங்கள் உணவு அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை மக்களின் சனத்தொகையில் 6.3 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என உலக உணவு திட்டம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் 60 சதவீதமான மக்கள் போசாக்கு குறைந்த உணவையே உட்கொள்கின்றனர்.

இலங்கையின் இந்த நிலையை சீர் செய்வதற்கு விரைந்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லையாயின், எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதி மிகவும் கடுமையானதாக அமையும் என உலக உணவு திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles