இஸ்ரேல் பராமரிப்பாளர் திட்டம் தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அதிகாரிகளால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சர், இஸ்ரேல் பராமரிப்பாளர் திட்டத்தின் கீழ் வேலைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறி தனிநபர்கள் பணம் வசூலிப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரை முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்ட அவர், மோசடியில் ஈடுபட்டுள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.