ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ளார்.
அங்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
அந்த நிலையில் பிரித்தானியாவின் புதிய அரசர் சார்ள்ஸை லண்டனில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.
இதன்போது ஆழமான கலந்துரையாடல் ஒன்று அவர்களுக்கிடையில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.