உலகில் அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்திலுள்ளது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 53 நாடுகளின் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளது.
உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடாக சிம்பாப்வேவும், லெபனான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் முறையே குறித்த பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.