Thursday, July 24, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகள் காரில் செல்ல வேண்டும் என்றே போராடுகிறேன் - அமைச்சர் ரொஷான்

விவசாயிகள் காரில் செல்ல வேண்டும் என்றே போராடுகிறேன் – அமைச்சர் ரொஷான்

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கே தான் எப்போதும் போராடி வருவதாக நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நெல் விவசாயிகளாகிய நீங்கள் 150,000 – 200,000 வருமானம் ஈட்டவே பெரும் சிரமத்திற்குள்ளாகிறீர்கள். அதை நாம் இங்கு தெளிவாகக் காணலாம். விவசாயிகள் குறைந்தபட்சம் காரிலேனும் செல்ல வேண்டும் என்றே நான் போராடுகிறேன். பருவகாலத்திற்கான உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சகம் மற்றும் உரச் செயலகத்துடன் கலந்தாலோசித்துஇ சாகுபடி தொடங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு வாரங்களில்இ இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உரத்தின் அளவைக் கொடுத்து, அந்தப் பிரச்சனையைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles