Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத ஸ்தலங்களுக்கான மின் கட்டணத்தை மீள்பரிசீலிக்குமாறு கோரிக்கை

மத ஸ்தலங்களுக்கான மின் கட்டணத்தை மீள்பரிசீலிக்குமாறு கோரிக்கை

மத ஸ்தலங்களின் மின்சாரக் கட்டணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக சில விகாரைகளுக்கு மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுதல் போன்ற மாற்று நடவடிக்கைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் விகாரைகளில் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles