பாடசாலைகள் நடத்தப்படும் நேரத்தை 4 மணி வரையில் நீடிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைப் போலவே விளையாட்டுச் செயற்பாடுகள் தொடர்பாகவும் மாணவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக மாலை 4 மணி வரையில் பாடசாலை நேரத்தை நீடித்து, 2 மணி நேரம் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.