Sunday, November 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநியூயோர்க் செல்கிறார் அலி சப்ரி

நியூயோர்க் செல்கிறார் அலி சப்ரி

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நியூயோர்க் செல்லவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

மேலும், இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர், அணிசேரா நாடுகளின் அமர்வு, ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்த மாநாடுகளில் உரையாற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட கலந்துரையாடல் நாளை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles