ஆசியாவிலேயே சிறந்த அரிசி இலங்கையில் பயிரிடப்படுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (18) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.