Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்

பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், பிரத்தியேக இல்லத்துக்குள், அத்துமீறி நுழைந்த 14 பேரை அடையாளம்காண, பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.

ஜுலை 9ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பிலுள்ள பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, தாக்குதல் நடத்தி, தீயூட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைதுசெய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கிறது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய காணொளிகளின் அடிப்படையில், பிரதான சந்தேகநபர்களாக கண்டறியப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, 14 நபர்களின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார்.

அவர்கள் குறித்து தகவலறிந்தோர், 0718 594 913 அல்லது 0112 449 358 அல்லது 0112 013 883 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles