களனி – பட்டிய சந்தி பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.