அரச உத்தியோகத்தர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றினால் அரசியல்வாதிகள் மக்களின் விமர்சனங்களுக்கு ஆளாக மாட்டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வில்பத்து தேசிய பூங்காவை அண்மித்த கிராமங்களின் காணி எல்லைகள் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.