புதிய மின்சாரக் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து, தங்களுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய தெளிவுபடுத்தலைப் பெற, நுகர்வோர் இப்போது 0775687387 என்ற எண்ணைப் பயன்படுத்தி PUCSL அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
வீட்டு மின் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய மின் கட்டண திருத்தத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது
ஒகஸ்ட் 10 முதல் பொது ஆலோசனை செயல்முறை மூலம் பொதுமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பின்னர் இது முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.