Friday, May 23, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாமலுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு

நாமலுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிரான பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

வழக்கின் சாட்சிகள் அடுத்த விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஊடாக 30 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles