Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வு பெறும் வயதெல்லையால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கலாம்

ஓய்வு பெறும் வயதெல்லையால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கலாம்

தமது சேவை தொடர்பான ஓய்வுபெறும் வயதை 60 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக அரச நிறுவனங்களின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறாயின், நீர்ப்பாசனத் திணைக்களம், தொடருந்து திணைக்களம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் செயலிழப்பு ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர்.

இதேவேளை, அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான சுற்றறிக்கை இன்று (14) வெளியிடப்படவுள்ளது.

அதற்கமைய, அரச ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக மட்டுப்படுத்தப்படும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார்.

இருப்பினும், சில அத்தியாவசிய சேவைகளை இந்த தீர்மானம் பாதிக்காது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles