Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்எலிசபெத் மகாராணியின் உடல் பக்கிங்ஹாம் மாளிகைக்கு

எலிசபெத் மகாராணியின் உடல் பக்கிங்ஹாம் மாளிகைக்கு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல், இன்று (14) பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

மறைந்த பிரிந்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நேற்று எடின்பரோவில் உள்ள செயின்ட் கில்ஸ் தேவாலயத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அதன்பின், உடலை லண்டனுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நோக்கத்திற்காக  ரோயல் ஏர் ஃபோர்ஸ் விமானம் பயன்படுத்தப்பட்டது, மேலும் அவரது மகள் இளவரசி ஏன், ராணியின் உடலுடன் முழு நேரமும் பயணம் செய்தார்.

தற்போது பக்கிங்ஹாம் அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடல் இன்று பிற்பகல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles