கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன், 2024 இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின் முதலீட்டாளர்களான Colombo West International Terminal Private Company தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றதுடன், இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை 2025ஆம் ஆண்டு நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கான செலவு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.