Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு கொள்வனவுக்கான உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்படவில்லை- லிட்ரோ

எரிவாயு கொள்வனவுக்கான உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்படவில்லை- லிட்ரோ

சமையல் எரிவாயு இறக்குமதி  தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போதும், இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம், சமையல் எரிவாயு கொள்வனவின் போது முழுமையாக வெளிப்படை தன்மையை பின்பற்றுகின்றது.

அது மாத்திரமன்றி உலக வங்கியின் கண்காணிப்பின் கீழ் அனைத்து கொள்வனவு மற்றும் பணக்கொடுப்பனவுகளும் இடம்பெறுகின்றன.

மேலும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும்போது அனைத்து நடவடிக்கைகளும் அரச திறைசேரியின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் நிதி மோசடியானது எவ்வாறு இடம்பெறும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் கேள்வி  எழுப்பியுள்ளதோடு, அவ்வாறான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles