போலியோ நோய் நிலைமை காரணமாக நியூயோர்கில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கலந்திருந்ததால் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை அதிகரிக்க அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிப்படுகிறது.
போலியோ பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என நியூயோர்க் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.