உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 20-ம் திகதியுடன் நிறைவடைகிறது.
இதனால் ஒக்டோபர் 30-ம் திகதிக்குள் வாக்காளர் பட்டியலில் கையெழுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, குறித்த கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.