துருக்கி மற்றும் டுபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா எதிர்வரும் நாட்களில் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த மாவை இறக்குமதியாளர்களே இறக்குமதி செய்யவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி அண்மைய நாட்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.