Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் - ஜனாதிபதி

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் – ஜனாதிபதி

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யு.எஸ். எய்ட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவருடனான நேற்றைய சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறைமை குறித்த இணக்கப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாவிட்டால், பொதுசன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் கருத்து கோரப்படும்.

2048ம் ஆண்டில் பாரியளவில் ஏற்றுமதி நடவடிக்கைகள் மேம்படும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம் 2050ம் ஆண்டளவில் இலங்கையின், தொழிநுட்பம், நவீன விவசாயம் என்பன ஏனைய ஏற்றுமதி நாடுகளுடன் போட்டித்தன்மை வாய்ந்ததாக அமையும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்காலம் மற்றும் தடுப்பு காவலில் இருந்த காலம், அவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதனை கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்க முடியுமா என்பதை அறிய பொறிமுறை ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles