Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலக வங்கி ஆதரவில் முன்பள்ளி சிறார்களுக்கு பகலுணவு

உலக வங்கி ஆதரவில் முன்பள்ளி சிறார்களுக்கு பகலுணவு

உலக வங்கியின் ஆதரவின் கீழ் முன்பள்ளி பிள்ளைகளுக்கான பகல் உணவு வழங்கும் நடவடிக்கை இந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

35 ஆயிரம் மலையக பிள்ளைகள் மற்றும் போசாக்கு குறைப்பாடுள்ள பகுதிகளில் வாழும் 1 இலட்சத்து 55 ஆயிரம் சிறார்களுக்கு இந்த மதிய உணவு வழங்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நயன எஸ்.பி.கே.டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது, 90 ஆயிரம் போசாக்கு குறைபாடுள்ள முன்பள்ளி சிறார்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதுடன், அதற்காக விநியோகத்தர்களுக்கு தலா உணவு ஒன்றுக்கு 30 ரூபா வழங்கப்படுகின்றது.

எனினும், அந்தத் தொகை போதாது என்பதால் அதனை 60 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கான பணம் உலக வங்கியின் உதவியின் கீழ் வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles