சந்தையில் வாகனங்களுக்கான உதிரிபாகங்களின் விலை 300% அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அனைத்து வாகனங்களுக்கான உராய்வு எண்ணெய், டயர், மின்கலம் போன்றவற்றின் தட்டுபாடு காரணமாக வாகனங்களை பராமரிக்க முடியால் போயுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வாகன உதிரி பாகங்களின் விற்பனையாளர்களின் கருத்துப்படி,
அவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பொழுது ஏற்படும் பிரச்சினைகள் காரணமாகவே இவ்வாறான நிலை வந்துள்ளது.
இந்நாட்களில் சாதாரணமாக ஒரு வாகனத்திற்கு திட்டமிடப்படுள்ள சேவைகளுக்கு மாத்திரம் 25000 அறவிடப்படுவதாக கூறப்படுகிறது.