Tuesday, July 22, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவுக்கு போதிய பணம் கிடைக்கவில்லை - மஹிந்த அமரவீர

நெல் கொள்வனவுக்கு போதிய பணம் கிடைக்கவில்லை – மஹிந்த அமரவீர

நெல் கொள்வனவு செய்வதற்கு அரச வங்கிகளிடமிருந்து போதிய பணம் கிடைக்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பணம் கிடைத்தவுடன் அரிசி கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெல் கொள்வனவு செய்வதற்கு இரண்டு பில்லியனை வழங்குமாறு இரண்டு அரச வங்கிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு எழுத்துமூல அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு தேவையான எரிபொருள் முதலியவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles