Wednesday, November 26, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்த கோரிக்கைக்கு அமைய, இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி கொள்வனவு ஒப்பந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அரசாங்கத்தின் நிதிக்குழுவின் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய இது தொடர்பான விசாரணைக்காக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கணக்காய்வாளர் நாயகத்துடன் இன்று கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles