செய்திகள்உள்நாட்டுடின் மீன் இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

டின் மீன் இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

உள்நாட்டு டின் மீன் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்குமாறு தமது கோரிக்கைகளை அமைச்சரவைக்கு முன்வைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று (7) வர்த்தக அமைச்சில் உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் சந்தையில் குறைந்த விலையில் கிடைப்பதால் உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதனால் மீனவ மக்கள் உட்பட பலர் பாதிக்கப்படுவதால் டின் மீன் இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles