Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு விற்றமின் D குறைபாடு

சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு விற்றமின் D குறைபாடு

நாட்டின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் நிரஞ்சலா மீகொட விதான இதனைத் தெரிவித்துள்ளார்.

விற்றமின் D குறைபாட்டால் மக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் துன்பங்களுக்கு உள்ளாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய ஒளி மூலம் சாதாரண மக்கள் தங்களுக்குத் தேவையான விற்றமின் Dயைப் பெற முடியும் என்றும், இது மிகவும் எளிமையான முறையெனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு சராசரி நபர் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் சூரிய ஒளியில் இருப்பது முக்கியமானது என மருத்துவர் நிரஞ்சலா மீகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles