தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தலைவர் உண்டியல் மற்றும் முறைகேடான வழிகளில் அமெரிக்க டொலர் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதாக அஜித் மன்னப்பெரும MP தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கண்டுபிடுக்கபட்ட உலகின் பெரிய இரத்தினக்கல் விற்பனைக்காக வௌிநாட்டுக்கு அனுப்பி ஒரு வருடகாலம் ஆகிறது.
ஆனால் இன்னும் அதற்கு என்ன நடந்தது என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்ற இன்னும் 04 கற்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பபட்டுள்ளதெனவும், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் ஊழல்கள் மற்றும் மோசடிகளை தடுக்க முறையான நடவடிக்கை அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.