Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுனிசெப் அறிக்கையை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு

யுனிசெப் அறிக்கையை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கை 6 ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடும் யுனிசெப்பின் (UNICEF) அண்மைய அறிக்கையை இலங்கையின் சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.

சுகாதார அமைச்சில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, இந்த அறிக்கையை தொகுக்க யுனிசெப் பயன்படுத்திய தரவுகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் நடத்திய தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போசாக்கின்மை நிலை 13.2 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், யுனிசெப் அறிக்கை நீண்ட கால தரவுகளின் அடிப்படையில், சிறுவர்களின் ஊட்டச் சத்து குறைபாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கணக்கிடுவதற்கு, வயதுக்கேற்ற உயரம், உயரத்துக்கான எடை மற்றும் வயதுக்கேற்ற நிறை ஆகிய மூன்று காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், ஆனால் யுனிசெப் தனியாக உயரத்துக்கேற்ற நிறையை மட்டும் பயன்படுத்துவதன் அடிப்படையில் தவறான அறிக்கையைத் தயாரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

யுனிசெப் ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு வருடங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்ததாகவும், இலங்கைக்கான 1995 முதல் 2019 வரையிலான நீண்ட கால ஆய்வுகளின் தரவுகள் ஒப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles