முதலீடுகளை ஊக்குவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொது-தனியார் கூட்டு (PPP) தேசிய நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பான பிரேரணை நேற்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தேசிய நிறுவனம் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இலங்கையில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் சிக்கல்களை அடையாளம் காண்பதற்கான முன்மொழிவுகளை வழங்குவதன் மூலம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
அவற்றைத் தீர்ப்பதுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொது – தனியார் கூட்டாண்மை (PPP) திட்டங்களைக் கண்டறிந்து செயற்படுத்தவுள்ளது.