போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
ஹெரோயினை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் சட்டவிரோத செயல் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்இ பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.