நாட்டில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 76ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அங்கு தெரிவித்த முக்கிய சில விடயங்கள்
இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் நிறைவடைந்துவிட்டது – நாட்டை மீட்கும் இரண்டாவது போராட்டம் ஆரம்பித்துள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக வேறொரு சட்டம் கொண்டுவரப்படும்.
எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதை மட்டுமே செய்கின்றன.
மக்கள் தற்போதைய அரசியல் முறைமையை வெறுக்கின்றனர்.
இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
22ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் யாப்பில் மேலும் திருத்தங்கள் செய்யப்படும்.
சகல கட்சிகளின் தலைவர்களையும் உள்ளிடக்கிய தேசிய சபையை நியமிக்கும் நடவடிக்கை இந்த வாரம் இறுதி செய்யப்படும்.