எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என தாம் நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவாக அதிகரித்தால், பாண் இறாத்தல் ஒன்றின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படுமென உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமையைத் தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நுகர்வோர்கள் மட்டுமின்றி தாங்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.