புசல்லாவை – இஹலகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் மாமனாரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 44 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.