நஷ்டத்தில் அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இடைக்கால பாதீட்டு திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் அவ்வாறானதொரு அலகொன்றை நிறுவுவதற்கு முன்மொழிந்தார்.
அதன்படி, நஷ்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பான வழிகாட்டுதலை வழங்க நிதியமைச்சின் கீழ் இந்தப் பிரிவு நிறுவப்படவுள்ளது.