Thursday, February 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநந்தலாலை நீக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை - பிரசன்ன ரணதுங்க

நந்தலாலை நீக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை – பிரசன்ன ரணதுங்க

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘தற்போதைய மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை. அவர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். தற்போதைய ஜனாதிபதி அவரது பதவிக்காலத்தை நீட்டித்தார்.

மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய முயல்வதாக எதிர்க்கட்சியினர் இந்த நாட்டுக்கு காட்ட முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா என்று தெரியவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles