எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால் உலக சந்தையில் உள்ள விலைகளுக்கு ஏற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கும் இந்த தருணத்தில், இந்த எரிபொருள் சலுகையை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் செயற்படுவதாக அரசாங்கம் கூறியுள்ள போதிலும், வரி செலுத்தியதன் பின்னர் தற்போது ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபா இலாபம் அரசாங்கத்திற்கு கிடைத்து வருகிறது.
விலைச்சூத்திரம் தொடர்பில் சட்ட ரீதியான அந்தஸ்து இல்லாததால் அரசாங்கம் விரும்பியவாறு செயற்பட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.