சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்படிக்கையை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஹர்ஷ டி சில்வா MP, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி இவ்வாறு செய்யத் தவறினால், பொது நிதிக் குழுவின் தலைவர் என்ற தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆவணத்தை வெளிக்கொணருவேன் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பணியாளர் நிலை ஒப்பந்தத்தின்படி அரசாங்கம் என்ன செய்ய ஒப்புக்கொண்டது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கடன்களை மறுசீரமைப்பதில் கடன் வழங்குபவர்களுடன் அரசாங்கம் உடன்பாடு செய்ய வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். உள்நாட்டுக் கடனை மறுசீரமைத்தால் அனைத்து குடிமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.