2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16.48 பில்லியன் ரூபா செலவாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் கல்வியாண்டுக்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களில் தோராயமாக 45% அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினாலும் ஏனைய 55% தனியார் அச்சகத்தினாலும் அச்சிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான காகிதம், இந்தியக் கடனில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.