நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கடந்த வருடம் ஆயிரத்து 304 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, தெஹிவளை, பத்தரமுல்லை, கடுவெல, கொத்தட்டுவ, ஹோமாகம, மஹரகம மற்றும் எகொட உயன ஆகிய பிரதேசங்கள் டெங்கு பரவல் அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகின்ற 7 மாவட்டங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.