Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகணவனின் கொடூர செயல் (Photos)

கணவனின் கொடூர செயல் (Photos)

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.

நேற்று (04) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் கடந்த 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி தாய் வீட்டில் இருந்த போது கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை இன்று (05) இடம்பெறவுள்ளது.

கொலையைச் செய்த சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles