Monday, May 12, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்

தங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி பல தொழில்சார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள் எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை குறித்த இடத்தை விட்டு விலகப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

QR முறையின் கீழ் முச்சக்கரவண்டிக்கு வாராந்தம் 5 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுவதுடன், அது போதாது என தொழில்சார்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், எரிசக்தி அமைச்சு இதுவரையில் எரிபொருள் ஒதுக்கீட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன்படி, தமக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி தொழில்சார்ந்த முச்சக்கரவண்டி சாரதிகளின் பல சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை குறிப்பிடத்தக்கது. அத்தோடு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் சிலவற்றுக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles