Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் நிவாரணம் வழங்குவதற்கு QR முறை

எதிர்காலத்தில் நிவாரணம் வழங்குவதற்கு QR முறை

நிவாரணங்கள் பெறும் மக்களுக்கு QR முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் மக்களுக்காக இந்த செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நிவாரணம் எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அரசின் நலத்திட்ட உதவிகளை எதிர்பார்க்கும் அனைத்து மக்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles