Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது - நளின் பெர்னாண்டோ

எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – நளின் பெர்னாண்டோ

உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (05) காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோதுமை மாவுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது நடைமுறைச் சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கேள்வியை பூர்த்தி செய்வதற்கு துருக்கி மற்றும் டுபாயிலிருந்து கோதுமை மா இறக்குமதிசெய்ய அங்குள்ள ஏற்றுமதியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு காரணமாக சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் கூட கோதுமை மாவின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles