Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉரத்தினால் உறவு பாதிக்காதிருக்க வெளிவிவகார அமைச்சிடம் பொறுப்பு

உரத்தினால் உறவு பாதிக்காதிருக்க வெளிவிவகார அமைச்சிடம் பொறுப்பு

சீன உரக்கப்பல் தொடர்பான முரண்பாடுகளை இரு நாடுகளினதும் நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாள்வதற்காக, அதனை வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

சீனாவின் கிண்டாவே சீவின் பயோடெக் நிறுவனத்தை இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அரசாங்கத்திடம் பரிந்துரைத்திருந்தார்.

சேதன பசளை பரிமாற்றம் தொடர்பான விடயங்களில் உரிய வகையில் செயற்பட்டிருக்காமையே இதற்கான பிரதான காரணமாகும்.

இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கைக்கான சீன தூதுவருடன் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles